close
Choose your channels

அஜித்தின் 'துணிவு' படப்பிடிப்பு முடிவது எப்போது? ரிலீஸ் இந்த தேதியில் தான்!

Saturday, October 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படப்பிடிப்பில் அஜீத், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 9 அல்லது 10ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என்றும் அதன்பின் படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே ‘துணிவு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருப்பதால் இந்த படம் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் ’வாரிசு’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ‘துணிவு’ திரைப்படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் போனிகபூர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் ஒரு சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos