பாஜகவில் இணைகிறாரா தமிழ் நடிகையின் கணவர்? எல்.முருகனுடன் சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

தமிழ் நடிகையின் கணவரும் பிரபல இயக்குனருமான ஒருவர் பாஜக அலுவலகத்தில் எல் முருகன் அவர்களை நேரில் சந்தித்து பேசி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு என்பது தெரிந்ததே. இவர் தற்போது திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அனேகமாக அந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் குஷ்பு பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி சற்றுமுன் பாஜக அலுவலகம் சென்று பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது சுந்தர் சி பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் சுந்தர் சி பாஜகவில் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஷ்பு திமுகவில் இருந்த போதும், காங்கிரசில் இருந்த போதும் அரசியலில் ஈடுபடாமல் இருந்த சுந்தர் சி, தற்போது பாஜகவில் இணைய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'பிளாக்பஸ்டர் மாஸ்டர்': அஜித் ரசிகையின் டுவீட் வைரல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியானது என்பது தெரிந்ததே.

'குக் வித் கோமாளி' பவித்ராவின் முதல் படம் குறித்த முக்கிய தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு மட்டுமின்றி தினந்தோறும்

ப்ரியா ஆனந்த் பதிவு செய்த சூரியோதய புகைப்படம்: நெட்டிசன்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்!

ஜெய் நடித்த வாமனன் என்ற திரைப்படத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன்பின்னர் 'வணக்கம் சென்னை' 'இரும்புக்குதிரை' 'முத்துராமலிங்கம்'

லாக்டவுனுக்கு பின் முதல் 50வது நாள் படம்: 'மாஸ்டர்' படத்தை தெறிக்க வைக்கும் ரசிகர்கள்! 

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் 'மாஸ்டர்' கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்தது என்பதும் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ரசித்து பார்த்தார்கள்

இதெல்லாம் ஒரு கேள்வியா? உச்சநீதிமன்ற நீதிபதியின் கேள்விக்கு நடிகை டாப்ஸி காட்டம்!

தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை டாப்ஸி தொடர்ந்து சமூக விஷயங்களில் தலையிட்டு கருத்து கூறி வருகிறார்.