'வாரிசு' படப்பிடிப்பு முடிந்தவுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆன விஜய்: குஷ்பு கூறிய அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

'வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மருத்துவமனையில் விஜய் அட்மிட் ஆனதாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள குஷ்பூ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அஜித்தின் ’துணிவு’ படத்துடன் 'வாரிசு’ படம் மோத உள்ளதால் பொங்கல் வெற்றியாளர் யார் என்ற கேள்விக்கு விடை நாளை கிடைத்துவிடும்.

இந்த நிலையில் 'வாரிசு’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது விஜய்க்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்ததாகவும் ஆனால் அந்த காட்சிக்காக அனைத்து நட்சத்திரங்களும் தயாராக இருந்ததால் படப்பிடிப்பை ரத்து செய்ய விரும்பாத விஜய், சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு படப்பிடிப்புக்கு தயாரானார் என்று குஷ்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அன்றைய நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

துணிவா? வாரிசா? டாஸ் போட்டு முடிவு செய்த ரசிகர்கள்

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் கிட்டத்தட்ட சம அளவில்

இந்த மாதிரி ஒரு அட்டாக்கை இந்தியா யோசித்து கூட பார்த்திருக்காது: 'பதான்' டிரைலர்

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த 'பதான்' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய செய்திகள் கடந்த சில நாட்களாக வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்.. வைரல் புகைப்படம்!

பிரபுதேவாவின் மகன் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரை அப்படியே உரித்து வைத்தது போல் அவரது மகன் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: என்ன காரணம்?

முன்னாள் முதலமைச்சரை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வாரிசு' இலவச டிக்கெட் வேணுமா? இதை செஞ்சா போதும்.. விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!

 'வாரிசு' படத்தின் இலவச டிக்கெட் வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.