close
Choose your channels

'வாரிசு' இலவச டிக்கெட் வேணுமா? இதை செஞ்சா போதும்.. விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!

Tuesday, January 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வாரிசு’ படத்தின் இலவச டிக்கெட் வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முன்பதிவு ஒருசில நொடிகளில் முடிந்துவிட்ட நிலையில் நாளை இந்த படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கம் சற்று முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்தால் அவர்களுக்கு 'வாரிசு’ படத்தின் இலவச டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது விஜய் மக்கள் இயக்கம் ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பின் காரணமாக ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் கொடுப்பார்கள் என்றும், அதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஒரு சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.