'குஷி' புரமோஷன் விழா.. செம்ம கெமிஸ்ட்ரியில் விஜய் தேவரகொண்டா - சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த ’குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சுதந்திர தினத்தில் நடந்தது. இந்த விழாவில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உட்பட குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்பட ஆல்பங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது

இந்த விழாவில் மேடையில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ’குஷி’ படத்தின் பாடலுக்கு நடனம் ஆடினர். இருவரும் லைவ்வாக இந்த நிகழ்ச்சியில் நடனமாடியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. கிளாமர் உடையில் வந்த சமந்தாவை நடிகர் விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி ரொமான்ஸ் செய்த காட்சி இருவரின் செம்ம கெமிஸ்ட்ரியை உறுதி செய்தது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார். ஹேஷம் அப்துல் வகாப் இசையில் முரளி ஒளிப்பதிவில் ப்ரவின்புடி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த செய்தி வாசிப்பாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பாத்திமா பாபு, அனிதா சம்பத், லாஸ்லியா உள்ளிட்ட செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் 7வது சீசனிலும் ஒரு செய்தி வாசிப்பாளர்

அட்லி உதவியாளர் இயக்கத்தில் துல்கர் சல்மான்.. நாயகி இந்த பிரபலமா?

அட்லியின் உதவியாளர் கார்த்திகேயன் வேலப்பன் என்பவர் இயக்க இருக்கும் திரைப்படத்தில் துல்கர் சாமான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

'கைதி' படத்தில் நடிக்க இருந்த நேரத்தில் உண்மையிலேயே 'கைதி' ஆனேன்: 'லியோ' நடிகர்..

 கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது

'துருவ நட்சத்திரம்' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரன்னிங் டைம் குறித்த தகவல்..!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில்  'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் கடந்த ஏழு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பு மற்றும் தொழில் பணிகள் முடிவடைந்து  ரிலீசுக்கு

மூன்றே ஷெட்யூல்.. 'விடாமுயற்சி' படத்திற்காக பக்கா பிளான் போட்ட மகிழ் திருமேனி..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல்