close
Choose your channels

'குஷி' புரமோஷன் விழா.. செம்ம கெமிஸ்ட்ரியில் விஜய் தேவரகொண்டா - சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, August 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த ’குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சுதந்திர தினத்தில் நடந்தது. இந்த விழாவில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உட்பட குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்பட ஆல்பங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது

இந்த விழாவில் மேடையில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ’குஷி’ படத்தின் பாடலுக்கு நடனம் ஆடினர். இருவரும் லைவ்வாக இந்த நிகழ்ச்சியில் நடனமாடியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. கிளாமர் உடையில் வந்த சமந்தாவை நடிகர் விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி ரொமான்ஸ் செய்த காட்சி இருவரின் செம்ம கெமிஸ்ட்ரியை உறுதி செய்தது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார். ஹேஷம் அப்துல் வகாப் இசையில் முரளி ஒளிப்பதிவில் ப்ரவின்புடி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos