யார் வில்லன் என்பது கிளைமாக்ஸில்தான் தெரியும். கே.வி.ஆனந்த்

  • IndiaGlitz, [Monday,August 29 2016]

'அனேகன்' வெற்றிக்கு பின்னர் விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் நடிப்பில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த், முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தற்போது தொடங்கியுள்ளார்.
விஜய்சேதுபதி-டிராஜேந்தர் என வித்தியாசமான கூட்டணியை இணைத்துள்ள கே.வி.ஆனந்த், இந்த படத்தின் ஹீரோ யார், வில்லன் யார் என்பது கிளைமாக்ஸில்தான் தெரிய வரும் என்றும், இருவரின் கேரக்டர்களிலும் ஹீரோ, வில்லன் ஆகிய இரண்டு அம்சங்களும் இருக்கும்' என்று கூறினார்.
முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியாக படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த படத்தின் பாடல் ஒன்று தென் அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், மொத்த படப்பிடிப்பும் வரும் அக்டோபருக்குள் முடிந்துவிடும் என்றும் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.

More News

விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர் என பன்முகத்துடன் கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் விஷால் இன்று தனது 39வது...

சபாஷ் நாயுடு பணியை மீண்டும் தொடங்கினார் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே

இலங்கை தமிழர்கள் குறித்து சேரன் பேசியதற்கு விஷாலின் கருத்து

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் திருட்டு டிவிடி கும்பல் மற்றும் இணையதளங்களில்...

அஜித்தால் அப்புக்குட்டிக்கு கிடைத்த அமெரிக்க வாய்ப்பு

சுசீந்திரன் இயக்கிய 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, அஜித் நடித்த 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

'விஜய் 60' பட நாயகி திடீர் காயம். மருத்துவமனையில் அனுமதி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பாப்ரி கோஷ் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருவது அறிந்ததே