பெப்சி-தயாரிப்பாளர்கள் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது தொழிலாளர் நலவாரியம்

  • IndiaGlitz, [Thursday,August 03 2017]

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கும் இடையே சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் காரணமாக பெப்சி தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல சீனியர் திரையுலக பிரபலங்கள் இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை நாளை மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 'காலா', 'மெர்சல்' உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனைக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்று திரையுலகின் அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

சச்சின், டிராவிடுக்கு சமமானவரா விராத்கோஹ்லி! முகமது யூசுப் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, ஐசிசி ரேங்கிங் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் தற்போது உள்ளார். இருப்பினும் சச்சின், டிராவிட் ஆகியோர்களை ஒப்பிடும் அளவுக்கு விராத் கோஹ்லி இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது யூசுப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்...

பிக்பாஸ் வீட்டில் ஓவியா உண்ணாவிரதம்! என்ன செய்ய போகிறார் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்த ஒரே நபரான ஓவியா திடீரென உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளதாக சற்றுமுன் வெளிவந்துள்ள புரமோவில் தெரிகிறது...

ஜூலி திருந்தவே மாட்டார்! கமல் முன் ஓவியா சொன்னது நிரூபணம் ஆனது

கடந்த வாரம் கமல்ஹாசன் முன் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான ஜூலி, 'நான் இதுவரை சில வார்த்தைகள் அதிகம் சேர்த்து சிலவற்றை கூறியது உண்மைதான்(பொய்க்கு இப்படி ஒரு சால்ஜாப்பு)...

சிலை வைப்பது அஜித்துக்கு பிடிக்குமா? இயக்குனர் சிவா பதில்

தல அஜித்துக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதும், அஜித் பெயரில் அன்னதானம், சமூக சேவைகள் ஆகியவைகளை அவர்கள் செய்து கொண்டிருப்பதும் தெரிந்ததே...

இரவோடு இரவாக மெரினாவில் இருந்த சிவாஜி சிலை அகற்றம்

சென்னை மெரீனாவில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டது.