close
Choose your channels

புடிச்சத பண்ணினா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்: நயன்தாராவின் 'அன்னபூரணி' டிரைலர்..!

Monday, November 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ என்ற திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நயன்தாரா செஃப் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் நிலையில் அங்கு அசைவம் சமைக்க வேண்டும் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிவிட்டு செஃப் படிப்புக்கு படிக்கிறார்.

அதனால் நயன்தாராவுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவரது குடும்பத்திற்கு ஏற்படும் கெட்ட பெயர்கள், அதையெல்லாம் தாண்டி அவர் எப்படி தனது கனவை நனவாக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

நயன்தாரா மிகச்சிறப்பாக செஃப் கேரக்டரில் என்பதும் நடித்துள்ளார் என்பதும் ஜெய் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். தமன் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு பிரவீன் தோனி படத்தொகுப்பு ஆகிய அனைத்தும் சிறப்பாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் நயன்தாராவுக்கு ஒரு பெற்று வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனவுல கோட்டை கட்டாத, தெருவில் கிரிக்கெட் விளையாடுற எல்லாரும் சச்சின் ஆக முடியாது, பாஸ் கண்டக்டரா இருக்குறவங்க எல்லாரும் சூப்பர் ஸ்டார் மாற முடியாது

புடிச்சத பண்ணினா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் இங்க எந்த கடவுளும் கறி சாப்பிட்டா தப்புன்னு சொன்னதே இல்லை

ரங்கனுக்கு பிரசாதம் சமைக்கிறவன் பொண்ணு, கறி சமைச்சா பக்தர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள்

போன்ற வசனங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment