close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

Tuesday, November 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

நடிகை நயன்தாராவுக்கு ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் நடித்த 'O2’ மற்றும் ’காட்பாதர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது ’கோல்ட்’ என்ற மலையாள படத்திலும் ’ஜவான்’ என்ற இந்தி படத்திலும் நடித்தி வருகிறார் என்பதும், ‘கனெக்ட்’ மற்றும் ’இறைவன்’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ’என்றென்றும் காதல்’, ’மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும், இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment