கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது: அமிதாப் குடும்பம் குறித்து லதா மங்கேஷ்கர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. முதல்கட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராதித்யா ஆகியோருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த நிலையில் அடுத்தகட்ட பரிசோதனையில் இருவருக்குமே பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததால் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் சமீபத்தில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமிதாப் குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு அவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அமிதாப் குடும்பத்தினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய போது ’இந்த செய்தியை கேட்டதும் எனக்கு கன்னத்தில் அறைவது போல் இருந்தது. அமிதாப் குடும்பத்தினர்களை கொரனோ வைரஸ் நோய் தாக்கியது என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. கொரோனா வைரஸ் யாரையும் விடவில்லை. அது இங்கேயேதான் மாற்றி மாற்றி அனைவரையும் தாக்கிக் கொண்டே வருகிறது’ என்று கூறினார்

மேலும் ஆராதித்யா சின்ன குழந்தை, அவர் கஷ்டப்படக்கூடாது. முழு அமிதாப்பச்சன் குடும்பத்திற்காகவும் குறிப்பாக ஆராதித்யாவுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் அனைவரும் விரைவில் மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். லதா மங்கேஷ்கரின் இந்த பேட்டி தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது

More News

கொரோனா ஒழிப்பில் இந்தியாவிற்கே வழிகாட்டியான சென்னை: தமிழக அரசின் சாதனை

சென்னையில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை பார்த்து இந்தியாவே ஆச்சரியம் அடைந்து உள்ளது என்பதும் இந்தியாவிற்கே சென்னை ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

சிம்புவின் 'மாநாடு' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பது தெரிந்ததே

கணவரின் உடலை தள்ளுவண்டியில் தள்ளிச்சென்ற மனைவி: கொரோனா பயத்தால் மறக்கப்பட்ட மனிதநேயம்

கொரோனா அச்சம் காரணமாக இறந்த கணவரின் உடலை இறுதிச்சடங்கு செய்ய யாரும் உதவி செய்யாததால் சுடுகாட்டிற்கு அவரது மனைவி தனது மகன்களுடன் தள்ளுவண்டியில் தள்ளிச்

திருப்பதி கோயில் முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு: கோயில் மூடப்படுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ப்ரியாமணியின் பாடிபில்டிங்கிற்கு உதவிய கணவர்: வைரலாகும் புகைப்படம்

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக