லெஜண்ட் சரவணனுடன் நடிக்கும் குக் மற்றும் கோமாளி.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,April 09 2023]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் மற்றும் கோமாளி ஆகிய இருவரும் லெஜண்ட் சரவணா உடன் நடித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவரது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் லெஜண்ட் சரவணா தனது நிறுவனங்களின் விளம்பர படங்களில் அவரே நடித்து வருகிறார் என்பதும் இவருடன் தமன்னா, ஹன்சிகா உட்பட பல முன்னணி நடிகைகள் விளம்பர படத்தில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் லெஜண்ட் சரவணன் நிறுவனத்தின் அடுத்த விளம்பர படத்தில் குக் வித் கோமாளி சீசன் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்ற ஸ்ருதிகா மற்றும் கோமாளி மணிமேகலை ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இது குறித்த புகைப்படத்தை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நேற்று சரவணன் அவர்களுடன் விளம்பர படப்பிடிப்பு கலந்து கொண்டேன், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சரவணன் அவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் அன்பானவர், அவருடன் நடித்த இந்த படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது, அதுமட்டுமின்றி எனது பைத்தியக்கார தோழி ஸ்ருதிஹாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்து பணி புரிந்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

3வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்.. 

 விஷ்ணு விஷால் நடித்த 'மோகன்தாஸ்', 'ஆர்யான்' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்

விஜய் டிவி நிகழ்ச்சியில் அம்பிகா-ராதா.. அவங்க நடிச்ச படத்தில் இருந்து கேள்வி கேட்ட பிரியங்கா..!

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 80களின் நாயகிகளாக இருந்த அம்பிகா மற்றும் ராதா கலந்து கொண்ட நிலையில் அதில் அம்பிகா நடித்த படத்திலிருந்து பிரியங்கா ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

கொட்டும் மழையில் நடுரோட்டில் நடந்து செல்லும் விக்கி-நயன் ஜோடி..  குவியும் பாராட்டுக்கள்..!

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஹைதராபாத் சாலையில் நடந்து சென்ற வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த தம்பதியின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

5 வருடங்களுக்கு பின் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.. இன்று இரவு சூப்பர் அறிவிப்பு..!

ஐந்து வருடங்களுக்கு பின்னர் தனுஷ் அதிரடி முடிவு எடுத்துள்ளதை அடுத்து இது குறித்து அறிவிப்பு இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருவாய் கலம் ஏற ஆயிரம் வேழம் போல': ஷங்கர் மகாதேவன் சித்ரா குரலில்  'PS 2' பாடல்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது