close
Choose your channels

'லியோ' முதல் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரபூர்வ தகவல்கள்..!

Friday, October 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனையை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.132 கோடி முதல் நாளில் வசூல் செய்து உள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.38 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் முதல் நாளில் ரூ.16 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இந்த படம் £571.5K வசூல் செய்துள்ளதாகவும் இங்கிலாந்து நாட்டின் 'லியோ’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விரைவில் தமிழ்நாடு மற்றும் உலக அளவிலான அதிகாரப்பூர்வ வசூல் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment