close
Choose your channels

'லியோ' படத்தில் கெளதம் மேனனுக்கு இந்த கேரக்டரா? சரியான சம்பவம் இருக்குது..!

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கௌதம் மேனன் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் போலீஸ் டிரஸ் அணிந்து உள்ள நிலையில் இந்த படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவருடன் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பாபு ஆண்டனியும் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் எதிர் எதிர் கேரக்டரில் நடித்திருக்கின்றார்கள் என்றும் இந்த படத்தில் சரியான சம்பவம் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மொத்தத்தில் இந்த புகைப்படம் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.