close
Choose your channels

'நா ரெடி' பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பு.. படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு..!

Wednesday, June 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நா ரெடி’ என்ற பாடல் வெளியானது என்பதும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பாடலில் விஜய் பெரும்பாலும் வாயில் சிகரெட் உடன் இருப்பதை பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் பொங்கி எழுந்தனர். மேலும் விஜய்க்கு கண்டனங்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அதிரடி முடிவெடுத்து பாடலில் சிகரெட் காட்சி இடம் பெறும் போதெல்லாம் ’புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும்’ என்ற சப்-டைட்டிலை இணைத்துள்ளனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment