close
Choose your channels

'துப்பாக்கியில இருந்து புல்லட் கிளம்பிருச்சுன்னா யாராலும் தடுக்க முடியாது: 'தி வாரியர்' டிரைலர்

Friday, July 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி வாரியர்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரியாக ராம் பொத்தினேனி ஆக்ரோஷமாக நடித்திருக்கும் இந்த படத்தில், பல திரைப் படங்களில் ஹீரோவாக நடித்த ஆதி வில்லனாக மிரட்டியிருக்கிறார். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்திருக்கும் நிலையில் நதியா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கும் வகையில் உள்ளது என்பதும் அதேபோல் ஹீரோ மற்றும் வில்லன் மோதும் காட்சிகள் தெறிக்க வைக்கும் என்பதும் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் களமிறங்கியிருக்கும் லிங்குசாமி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

’தி வாரியர்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டிரைலர் ரிலீசுக்கு பின் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.