close
Choose your channels

லிவ் இன் உறவில் வாழ்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்: இளைஞர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்..!

Thursday, April 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலில் லிவ் இன் முறையில் வாழ்ந்து விட்டு அதன் பிறகு ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என பிரபல பாலிவுட் நடிகை இளைஞர்களுக்கு அட்வைஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் தற்போது 72 வயதில் இருக்கும் நிலையில் இவர் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது அவரது படங்கள் பல சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ஜீனத் அமன் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தது தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர் ஒருவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது:

நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பு உங்கள் வாழ்க்கை துணையுடன் ஒன்றாக நீண்ட காலம் வாழ வேண்டும் என்றால் சில நாட்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை வைத்துக் கொள்ளுங்கள். என் இரு மகன்களுக்கும் நான் கூறிய அறிவுரை இதுதான். இதே அறிவுரையை தான் உங்கள் எல்லோருக்கும் நான் கூறுகிறேன்.

இரண்டு பேர் தங்கள் குடும்பங்களை இதில் ஈடுபடுவதற்கு முன்பு லிவ் இன் முறையில் வாழ்ந்து தங்கள் உறவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுதான் என் கருத்து, ஆயிரக்கணக்கான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உங்களால் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா என்பதற்கான சோதனை தான் இந்த லிவ் இன் உறவு முறை.

லிவ் இன் உறவு முறை இன்னும் இந்திய சமுதாயத்தில் உறுத்துதல் ஆகவே பார்க்கப்படுகிறது . லிவ் இன் முறையில் வாழ்ந்து இருவருக்கும் ஒத்துப்போன பின் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு இருவருக்கும் சண்டை சச்சரவு வராது என்று கூறியிருக்கிறார். ஜீனத் அமனின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.