பிரமாண்டமாக நடைபெறும் '2.0' இசை வெளியீட்டு விழா

  • IndiaGlitz, [Friday,October 20 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகபெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ள ஜீடிவி அனைத்து மொழிகளிலும் இந்த இசை வெளியீட்டு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் எமிஜாக்சன் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தவுள்ளனர்.

மேலும் துபாயில் உள்ள டவுண்டவுன் பர்ஜ் பார்க்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள '2.0' படத்தின் இசை வெளியீட்டை நேரடியாக கண்டு ரசிக்க தற்போது டிக்கெட்டுக்கள் மிக வேகமாக புக் ஆகிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிஜமாகவே நடந்த 'மெர்சல்' மருத்துவமனை காட்சி: அதிர்ச்சி தகவல்

நேற்று வெளியான தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோ டிரைவரான காளிவெங்கட்டின் மகள் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்.

நிலவேம்பு குடிநீர்: கமல்ஹாசன் சற்றுமுன் அளித்த புதிய விளக்கம்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு ஆண்டுக்கு பின்னர் முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த முரசொலி பவள விழாவிற்கு கூட அவர் வரவில்லை.

கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரவு: நடிகை ஓவியா

பிக்பாஸ் புகழ் ஓவியா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். 

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படப்பிடிப்பில் ஓவியா! வைரலாகும் ஸ்டில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களின் மனதில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் 'காஞ்சனா 3' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்'