கட்டிப்பிடித்து முத்தம்.. லோகேஷ் கனகராஜ் உடன் செம்ம கெமிஸ்ட்ரியில் ஸ்ருதிஹாசன் .. 'இனிமேல்' டீசர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் உருவாக்கி வரும் ’இனிமேல்’ என்ற ஆல்பம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த ஆல்பத்தை இசையமைத்து ஸ்ருதிஹாசன் பாடியுள்ள நிலையில் கமல்ஹாசன் இந்த பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் இந்த ஆல்பம் மார்ச் 25ஆம் தேதி ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூபில் பக்கத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘இனிமேல்’ ஆல்பத்தின் 18 வினாடி டீசர் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள், கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, படுக்கையில் புரள்வது போன்ற காட்சிகள் இருப்பதை பார்த்து இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது என ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆல்பத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Inimel the game begins from 25th March.
— Raaj Kamal Films International (@RKFI) March 21, 2024
Mark the Moment!
Streaming exclusively on https://t.co/UXpv3RSFt6#Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey #Inimelat25th@ikamalhaasan @Dir_Lokesh @shrutihaasan #Mahendran @RKFI @turmericmediaTM @IamDwarkesh @bhuvangowda84 @philoedit… pic.twitter.com/LCAju1D2eq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments