'விக்ரம்' படத்தில் இருந்து பிரியும் கிளைக்கதை: வேற லெவலில் லோகேஷ் பிளான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களின் கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் இணைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ’விக்ரம்’ படத்திற்கும் 'கைதி’ படத்திற்கும் ஆன தொடர்பு குறித்து செய்தி ஏற்கனவே வந்த நிலையில் தற்போது ’விக்ரம்’ படத்தின் கேரக்டர் ஒன்றை தனிப்படமாக இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தனியாக உருவாக்க திட்டமிட்டு நிலையில் தற்போது ’விக்ரம்’ படத்தில் அமர் என்ற கேரக்டரில் நடித்த பகத் பாசில் கேரக்டரை மட்டும் டெவலப் செய்து தனியாக அதை ஒரு திரைப்படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’விக்ரம்’ படத்தில் வரும் அமீர் கேரக்டரின் முந்தைய பகுதி குறித்த கதை தனியாக ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ‘கைதி’ திரைப்படத்தில் டில்லி கேரக்டரின் வாழ்க்கையின் நடந்த முந்தைய கதைதான் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக கூறப்பட்டது என்பது தெரிந்ததே.

More News

மீண்டும் பிரபலங்களை தாக்கும் கொரோனா: தமிழ் நடிகைக்கு பாதிப்பு!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் தற்போது தினசரி பாதிப்பு தமிழகத்தில் கிட்டத்தட்ட 700 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டிக் பெருங்கடலில் அஜித்: செம புகைப்படங்கள்!

அஜித் கடந்த சில நாட்களாக இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிலிருந்து அவர் பெல்ஜியம்

தளபதி விஜய் காமன் டிபியை வெளியிட்ட கலைப்புலி தாணு: என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

தளபதி விஜயின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி அவரது ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்பதும் இந்தக் கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பே காமன் டிபி வெளியிட்டு

யாராவது இதை சொன்னா மூஞ்சியிலேயே குத்துங்க: ஆர்ஜே பாலாஜியின் வீடியோ

ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பிளஸ் டூ மார்க் குறித்து தனது கருத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்த நிமிஷம் அனுமதி கிடைத்தால் எல்லாத்தையும் விட்டுட்டு போயிடுவேன்: நட்டி நட்ராஜ்

இந்த நிமிஷம் அனுமதி கிடைத்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ராணுவத்தில் சேர சென்று விடுவேன் என்றும் தேசமே தெய்வம் என்றும் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.