யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது: லோகேஷ் கனகராஜின் 'ஃபைட் கிளப்' டீசர்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நான் பொறக்குறதுக்கு முன்னாடி பிறந்த சண்டை இது.. யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது.. வேற வேற பேர்ல, வேற வேற ஆளுங்க இங்க அடிச்சுக்கிட்டே தான் இருக்க போறாங்க.. என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு திரைப்படமான ‘ஃபைட் கிளப்’ என்ற படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசரில் முழுக்க முழுக்க சேஸிங் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
முந்தைய படங்களை விட விஜயகுமார் இந்த படத்தில் ஆவேசமாக இருக்கிறார் என்பது டீசரிலிருந்து தெரிய வருகின்றது. கோவிந்த வசந்தாவின் பின்னணி இஐ அசத்தலாக உள்ளது. குறிப்பாக ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ’என் ஜோடி மஞ்ச குருவி’ என்ற பாடலின் பின்னணியில் நடக்கும் சண்டை காட்சிகள் ரசிக்க வைக்கிறது
அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)