close
Choose your channels

'கூலி' படத்தில் ரத்னகுமாருக்கு பதில் இவரா? சூப்பர் ஹிட் படத்தில் பணிபுரிந்தவர் ஆச்சே..!

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கூலி’ திரைப்படம் குறித்த வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் எடுத்த ஒரு அதிரடி முடிவு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் படங்களில் இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை எழுதும் பணியில் உதவியாளராக இருப்பார் என்பதும் ’விக்ரம்’ ’லியோ’ உள்பட சில படங்களில் அவர் பணிபுரிந்ததாகவும் தகவல் வெளியானது.

ஆனால் ’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார், ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, அவர் ‘தலைவர் 171’ படத்தில் பணிபுரிய மாட்டார் என்று கூறப்பட்டது. அதேபோல் அவரது பெயர் ’தலைவர் 171’ படத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வேறொரு முக்கிய நபரை லோகேஷ் கனகராஜ் தனது திரைக்கதை எழுதும் குழுவில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதுவதற்கு உதவியாளராக இருந்த சந்துரு அன்பழகன் என்பவர் தான் தற்போது ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் ’கூலி’ படத்தில் திரைக்கதை வசனம் எழுதும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ரத்னகுமாருக்கு பதிலாக சந்துரு அன்பழகன் என்பவரை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து அவருடன் இணைந்து தற்போது திரைக்கதை எழுதும் பணியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ’மாவீரன்’ திரைப்படத்தில் அவர் எழுதிய திரைக்கதை மற்றும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதேபோல் 'கூலி’ படத்திலும் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment