close
Choose your channels

கவின் வெளியேறுவதை தடுக்க லாஸ்லியா எடுத்த கடைசி முயற்சி!

Thursday, September 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேற கவின் எடுத்த முடிவை மாற்ற, சாண்டியும் லாஸ்லியாவும் பெரும் முயற்சி செய்தும் கவின் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை

லாஸ்லியா அழுது கொண்டிருந்தாலும் அவரிடம் விடை பெற்று கவின், மெயின் டோர் வழியாக தனது பெட்டியுடன் வெளியேறுகிறார். கவின் வெளியே சென்றவுடன் கதவு மூடியபோது கவினின் வெளியேற்றத்தை தடுக்க லாஸ்லியா கடைசி முயற்சியாக கதவின் இடையே கை வைக்கிறார். கவின் கையை எடு’ என்று கத்தியபோதிலும் லாஸ்லியா கையை எடுக்கவில்லை

கவின் வெளியே போனபோது லாஸ்லியாவிடம் அவர் கூறிய கடைசி வார்த்தை ‘லவ் யூ’ என்பதுதான். இதில் இருந்து அவர் எந்த அளவுக்கு லாஸ்லியா மீது அன்பு வைத்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அன்பு வெளியிலும் தொடருமா? என்பதை இருவர் மற்றும் அவரவர் குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகளில் தான் உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.