close
Choose your channels

லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம் இதுதான்!

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் லாஸ்லியா ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதையும் பார்த்தோம். மேலும் இந்த படத்தில் மாயா படத்தில் நடித்த ஆரி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற செய்தியையும் பார்த்தோம்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் தமிழ் படமான ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தின் நாயகியாக லாஸ்லியா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஹர்பஜன்சிங், ஆரி ஆகியோர் தனித்தனியாக நடிக்கும் படங்களில் லாஸ்லியா நடிக்கின்றாரா? அல்லது ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் லாஸ்லியா, ஆரி இருவரும் நடிக்கின்றார்களா/ என்ற குழப்பம் தற்போது லாஸ்லியா ஆர்மியினர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பம் விரைவில் தீர்க்கப்படும் என தெரிகிறது

இருப்பினும் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா ஆகியோர் முதல் முதலாக நடிக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.