close
Choose your channels

பசங்களுக்கு தாண்டி பசங்கள பத்தி தெரியும்: மணிகண்டனின் 'லவ்வர்' டீசர்..!

Sunday, December 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிகண்டன் நடிப்பில் உருவான ’குட் நைட்’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லவ்வர்’ என்ற படத்தின் படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது.

மணிகண்டன், ஸ்ரீ கௌரிப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மணிகண்டன் மற்றும் கௌரி பிரியா இருவரும் கல்லூரியில் இருந்தே காதலிக்கின்றனர்.

இந்த காதல் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நீடித்த நிலையில் திடீரென ஏற்படும் பிரச்சனையால் இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரிவுக்கு என்ன காரணம்? இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ஒன்றரை நிமிட டீசரில் இருந்து தெரிய வருகிறது.

மொத்தத்தில் ’குட் நைட்’ போலவே ’லவ்வர்’ படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதால் கண்டிப்பாக இந்த படமும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், சீன் ரோல்டான் இசையில், ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment