close
Choose your channels

'அவன் வந்துட்டான்'.. வேட்டையன் ராஜா பராக் பராக்.. லைகா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

Sunday, September 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் எம்எம்கீரவானி இசையில், லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சந்திரமுகி 2’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள மால் ஒன்றில் வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்த வீடியோவை லைகா நிறுவனம் சற்று முன் வெளியிட்டுள்ளது.

‘அவன் வந்துட்டான் என்ற குரலுடன் தொடங்கும் இந்த வீடியோவில் ’வேட்டையன் ராஜா பராக் பராக் பராக் என்று கூறப்படுகிறது. இந்த மாஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ஆர்ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos