பிரபலத்தின் பிறந்த நாள் கேக்கில் ஆளப்போறான் தமிழன்.. என்னடி மாயாவி நீ.. அட்லி, ப்ரியா வாழ்த்து..!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

தமிழ் திரை உலக பிரபலம் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது பிறந்தநாள் கேக்கில் ’ஆளப்போறான் தமிழன்’ ’என்னடி மாயாவி நீ’ போன்ற பாடல் வரிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் விவேக் என்பதும் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு இவர்தான் பாடல்கள் எழுதி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம் .

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் பிறந்த நாள் கேக் வெட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் ஆக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேக்கில் அவர் எழுதிய 'மெர்சல்’படத்தின் பாடல் ஆன ’ஆளப்போறான் தமிழன்’ மற்றும் ’வட சென்னை’ படத்தின் பாடல் ஆன ’என்னடி மாயாவி நீ’ போன்ற வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன. தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விவேக் சந்தோஷமாக பிறந்த நாள் கொண்டாடியதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் தற்போது ’கேம் சேஞ்சர்’ உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

2024 தேர்தலில் யாருக்கு ஓட்டு? ரசிகர்களுக்கு மறைமுக மெசேஜ் கொடுத்தாரா விஜய்?

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த அரசியல் கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெறும்

தனுஷ் மீது வழக்கு தொடர்கிறாரா பிரபல தயாரிப்பாளர்? என்ன காரணம்?

தனுஷ் மீது பிரபல தயாரிப்பாளர் வழக்கு தொடர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநவமி 2024: தேதி, நேரம், வழிபாடு, முக்கியத்துவம் இங்கே!

இந்து மக்களால் மிகுந்த பக்தியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ராமநவமி. இந்த புனித நாள், இறைவன் ஸ்ரீ ராமரின் பிறந்தநாளை குறிக்கிறது.

ரோபோ சங்கர் மகளின் திருமணத்தில் இவ்வளவு சர்ச்சையா?

இந்திரஜா நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து தனது மொத்த திறமையையும் வெளிக்காட்டி வெற்றி சூடிக்கொண்டார்...

தமிழ் புத்தாண்டு 2024 பலன்கள்: 12 ராசிகளுக்கான ஜோதிடர் பத்மநாபன் கணிப்பு!

ஆன்மீக கிளிட்ஸ் யூடியூப் சேனலில் மருத்துவ ஜோதிடர் பத்மநாபன் அளித்த பேட்டி, தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) 2024 அன்று 12 ராசிகளுக்கான பலன்களை கணித்துள்ளது.