பிரபலத்தின் பிறந்த நாள் கேக்கில் ஆளப்போறான் தமிழன்.. என்னடி மாயாவி நீ.. அட்லி, ப்ரியா வாழ்த்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலக பிரபலம் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது பிறந்தநாள் கேக்கில் ’ஆளப்போறான் தமிழன்’ ’என்னடி மாயாவி நீ’ போன்ற பாடல் வரிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் விவேக் என்பதும் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு இவர்தான் பாடல்கள் எழுதி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம் .
இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் பிறந்த நாள் கேக் வெட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் ஆக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேக்கில் அவர் எழுதிய 'மெர்சல்’படத்தின் பாடல் ஆன ’ஆளப்போறான் தமிழன்’ மற்றும் ’வட சென்னை’ படத்தின் பாடல் ஆன ’என்னடி மாயாவி நீ’ போன்ற வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன. தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விவேக் சந்தோஷமாக பிறந்த நாள் கொண்டாடியதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் தற்போது ’கேம் சேஞ்சர்’ உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Amazing birthday cake for @Lyricist_Vivek featuring his blockbuster single titles! 😍🔥✌🏻
— KARTHIK DP (@dp_karthik) April 16, 2024
A super-duper celebration by @Atlee_dir & co! 🎂pic.twitter.com/nMmr8OuE9A
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments