close
Choose your channels

மாரி செல்வராஜின் அடுத்த படம் இதுதான்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு

Monday, November 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் ’பரியேறும் பெருமாள்’ ’கர்ணன்’ மற்றும் ’மாமன்னன்’ ஆகிய மூன்று படங்களை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ’மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள நான்காவது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’வாழை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக மாரி செல்வராஜ் இயக்கி தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரியவுள்ளார். சாண்டி நடன இயக்கத்தில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment