close
Choose your channels

இந்த வாரம் 2 சூப்பர்ஹிட் தமிழ் படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்,.!

Wednesday, August 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் நிலையில் ஓடிடியில் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் கொண்டாட்டம் என்று கூறலாம்.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ என்ற திரைப்படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’மாவீரன்’ திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இந்த வாரம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இரண்டு தமிழ் படங்களும் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அம்மு அபிராமி நடித்த ’வான் மூன்று’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ‘பத்மினி’ என்ற மலையாள படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘நெய்மர்’ என்ற மலையாள படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ‘ஹிடிம்பா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘கமாண்டோ’ என்ற இந்தி படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment