காதலரை கைப்பிடிக்கும் சீரியல் நடிகை: திருமண தேதியும் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,November 13 2021]

ஜீடிவியில் ஒளிபரப்பான தொடரில் நடித்த நடிகை ஒருவர் தனது காதலரை கைப்பிடிக்க இருப்பதாகவும் திருமண தேதியை அவர் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜீடிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர் ’பூவே பூச்சூடவா’. ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து இந்த தொடரில் நடித்தனர் என்பதும் இந்த ஜோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரேஷ்மா மற்றும் மதன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்று கூறப்பட்ட நிலையில் நவம்பர் 15ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரேஷ்மா முரளிதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண அழைப்பிதழை வெளியிட்டு நாங்கள் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதே திருமண அழைப்பிதழை மதனும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த காதல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்த இரண்டையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்: சாட்டையை கையில் எடுக்கும் பிக்பாஸ் கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி. ஞாயிறு அன்று கமல் தோன்றும் இரண்டு நாட்களும் சுவராஸ்யமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று கமல் தோன்றும் நாள்

பா ரஞ்சித் - விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தற்போது புதுமுகங்கள் நடிக்கும் 'நட்சத்திரங்கள் நகர்கிறது' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்யலாமா என கேட்ட ரசிகருக்கு புகைப்படத்தின் மூலம் பதிலளித்த நடிகை!

திருமணம் செய்து கொள்ளலாமா? என தொலைக்காட்சி நடிகை ஒருவரை ரசிகர் ஒருவர் கேட்ட நிலையில் அதற்கு நாசுக்காக புகைப்படம் ஒன்றின் மூலம் அந்த நடிகை பதிலளித்துள்ளது

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்த பலனும் இல்லை: பிரபல இயக்குனர் 

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்தவித பலனும் இல்லை என பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'ஜெய்பீம்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த கேரள எம்.எல்.ஏ!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது