close
Choose your channels

மாதவன் - கங்கனா நடிக்கும் புதிய திரைப்படம்.. இயக்குனர் இந்த பிரபலம் தான்..!

Saturday, November 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஏற்கனவே தமிழில் ’தலைவி’ மற்றும் ’சந்திரமுகி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மாதவனுடன் மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் என்றும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் சாப்டர் 1’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment