மாதவன் நடித்து இயக்கிய 'ராக்கெட்டரி': சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,June 25 2022]

நடிகர் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 2 மணிநேரம் 37 நிமிடங்கள் அதாவது 157 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்திரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு: இதுதான் காரணம்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்து பேசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை மாற்றி அமைத்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'ஜென்டில்மேன் 2' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்!

கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் 'ஜென்டில்மேன் 2' திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நான் கர்ப்பமானதை சொல்லாததற்கு இந்த சாக்கடை குப்பைகள் தான் காரணம்: சின்மயி

பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததே தெரியாத ரசிகர்கள் திடீரென அவருக்கு குழந்தை பிறந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டு

லைகா நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த 'டான்'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.