நடிகை சன்னிலியோனுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்… 3 நாள் கெடு விதித்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம்வரும் நடிகை சன்னிலியோன் நடிப்பில் வெளியான ஒரு ஆல்பம் பாடலுக்கு தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் கடந்த 1960 களில் வெளியான பாடல் “மதுபன் மே ராதிகா நாச்சோ”. இது கிருஷ்ணன் மற்றும் ராதையின் காதலை மையப்படுத்தி அமைந்திருக்கும். இந்தப் பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு தற்போது ஷரிப் மற்றும் ஜோஷி இருவரும் மீண்டும் தங்களது குரலில் மதுபன் பாடலை ரீமேக் செய்துள்ளனர். இதற்கு நடிகை சன்னிலியோன் நடனமாடியிருக்கிறார். பிரபல இசை நிறுவனமான சரிகம இந்த ஆல்பத்தை வெளியிட்டு உள்ளது.
கடந்த 22 ஆம் தேதி யூடியூபில் வெளியான மதுபன் பாடல் தற்போது வரை ஒருகோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று படு வைரலாகி வருகிறது. ஆனால் இந்தப் பாடலில் நடிகை சன்னிலியோன் படு ஆபாசமாக நடித்துள்ளார் என்றும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் சில வரிகள் இந்து மதத்தினரை புண்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை மதுராவை சேர்ந்த சாமியார்கள் நூற்றுக்கணக்கில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பல அமைப்புகள் நடிகை சன்னிலியோனின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. மேலும் மத்தியப்பிரேசத்தின் உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா மதுபன் பாடலுக்காக நடிகை சன்னிலியோன், பாடகர் ஷரிப், ஜோஷி ஆகியோரை எச்சரித்துள்ளார். மேலும் இந்து மதத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த வீடியோவை அடுத்த 3 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் சரிகம நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் மதுபன் பாடலில் இடம்பெற்ற தலைப்பு மற்றும் வரிகளை நீக்கிவிட்டு மீண்டும் பாடல் புதிய வடிவில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களைச் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments