சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்பதால் சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

மேலும் சாத்தான்குளம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணையை துவக்கும் வரை, நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உடல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்றும், அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் இந்த வழக்கில் விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

முத்தக்காட்சிகளை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க கூடாது: வனிதா விஜயகுமார்

கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார் என்பதும், திருமணத்தின் போது மோதிரம் மாற்றிய பின்னர், இருவரும் லிப்கிஸ் அடித்த புகைப்படங்கள்

இளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்!!!

ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இணைந்து பணியாற்ற இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார்.

திடீரென மருத்துவ விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர்: என்ன காரணம்?

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக

அமீர்கான் வீட்டுக்குள்ளும் புகுந்தது கொரோனா: பாலிவுட்டில் பரபரப்பு

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

கொரோனாவே இன்னும் போகல... அதுக்குள்ள இன்னொரு பெருந்தொற்றா??? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

சீனாவின்  வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது.