பாலியல் தொல்லை தந்த பாஜக பிரமுகர்...! புகார் கொடுத்ததால் கத்திக்குத்து.....!

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் பக்கத்தில் இருக்கும் கோழிகுத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான், 60 வயது நிரம்பிய பாஜக நிர்வாகி மகாலிங்கம். அந்தப்பகுதியில் பாஜக நிர்வாகியாகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவன்6 சிறுமிகளிடம் ஆபாச படங்களை காண்பித்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். சிறுமிகளை கட்டிப்போட்டு, பலாத்காரம் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதையடுத்து பயந்துபோன சிறுமிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கொடூரன் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, ஜெயிலில் அடைந்துள்ளார்கள்.

இதன்பின் புகார் கொடுத்தவர்கள் மீது, மகாலிங்கத்தின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மகாலிங்கத்தின் மகன்களான ஜவஹர், சுதாகர் உள்ளிட்டோர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, காவல் நிலையத்தில் புகாரளித்த சிறுமியின் தந்தை மீது கத்தியால் தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க சென்ற சத்யராஜ் என்பவரையும் தாக்கிவிட்டு, அந்தஇடத்தில் இருந்து தப்பித்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜவஹர், சுதாகர், சுரேஷ்குமார், இளஞ்சேரன் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.