close
Choose your channels

விஜய் போலவே சினிமாவில் இருந்து விலகுகிறாரா மகேஷ்பாபு? ரசிகர்கள் அதிர்ச்சி..!

Sunday, March 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தற்போது ‘கோட்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’தளபதி 69’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்துடன் அவர் திரையுலகிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அரசியலில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கா விட்டால் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்று கூறப்பட்டாலும் இப்போதைய நிலையில் அவரது கடைசி படம் ’தளபதி 69’ தான் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் விஜய் போலவே மகேஷ் பாபு கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக அவர் முழுமையாக மூன்று ஆண்டுகள் ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில் இந்த படத்தின் இரண்டு பாக படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் என்றும் அதுவரை அவர் வேறு எந்த படத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

எனவே விஜய் போல் முழுமையாக மகேஷ் பாபு திரையுலகில் இருந்து விலகவில்லை என்றாலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரது படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போது நிலையாக உள்ளது. மகேஷ் பாபு ரசிகர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவரை திரையில் பார்க்க முடியாது என்று வருத்தம் அடைந்தாலும் மகேஷ் பாபு - ராஜமவுலியின் படம் அதற்கெல்லாம் சேர்த்து மிகப்பெரிய விருந்தாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் ’பாகுபலி’ படத்தில் 2014இல் கமிட் ஆனார், அந்த படத்தின் இரண்டாவது பாகம் 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் வரை அவர் வேறு எந்த படங்களின் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். ’பாகுபலி 2’ திரைப்படத்திற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு தான் அவரது ’சாஹோ’ படம் ரிலீஸ் ஆனது என்பதும் எனவே ’பாகுபலி ’யின் முந்தைய படத்திற்கும் ’சாஹோ’ படத்திற்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் இடைவெளி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment