நண்பரை கட்டிப்பிடித்து ஓணம் கொண்டாடும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படங்கள்!

தனது நெருங்கிய நண்பரை கட்டிப்பிடித்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், தற்போது தனுஷ் நடித்து வரும் ’மாறன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட மாளவிகா மோகனன் இன்று தனது நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்

குறிப்பாக தனது நெருங்கிய நண்பரை கட்டிப்பிடித்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் மலர்களால் கோலம் போட்ட புகைப்படத்தையும் ஒன்று பதிவுசெய்துள்ளார். அதில் நடுவில் ’எம்’ என்ற எழுத்து மோகனன்ஸ் என்பதை குறிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிரஞ்சீவியின் அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில்!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ், தெலுங்கில் 'தளபதி 67'? ஆச்சரியப்பட வைக்க்கும் அப்டேட்டுக்கள்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன்

சின்னத்தம்பி குஷ்பூ ரிட்டர்ன்ஸ்.....! வைரலாகும் செல்பி புகைப்படம்.....!

நடிகை குஷ்பூ தனது லேட்டஸ்ட் செல்பி புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

விவாகரத்து வதந்திக்கு பண்ணை வீட்டின் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போகிறார் என சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திக்கு தனது பண்ணை வீடு ஒன்றின் மூலம் சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல நடிகையுடன் டேட்டிங் செல்லும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!

பிரபல நடிகை ஒருவருடன் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.