close
Choose your channels

சிலம்ப சண்டை பயிற்சிக்கு பின் மாளவிகா செய்த வேலையை பாருங்க.. வைரல் புகைப்படங்கள்..!

Sunday, May 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் தனது தோழியுடன் இணைந்து சிலம்பு சண்டை பயிற்சி பெற்ற பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மாளவிகா மோகன் நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அடுத்த மாதம் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் உள்பட ஒரு சில தற்காப்பு கலைகளை மாளவிகா மோகன் உண்மையிலேயே பயின்று கொண்டார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்ட போது லைக்ஸ் அள்ளும் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சிலம்பம் பயிற்சியை அவர் தொடர்ந்து செய்து வருகிறார் என்பது அவர் தனது தோழியுடன் சிலம்ப பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பயிற்சி முடிந்தவுடன் இருவரும் புல் தரையில் படுத்து சிரித்து கொண்டிருக்கும் காட்சியின் புகைப்படம் உள்பட அனைத்து புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வருகிறது.

’தங்கலான்’ படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகன் பிரபல நடிகரின் தமிழ் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.