தனுஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்க கொரோனா தான் காரணம்: மாளவிகா மோகனன்

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன் என்பது தெரிந்ததே. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களிலும் ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த மாளவிகா மோகனன், சமீபத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் கொரோனா தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் கொரோனா பாதிப்புக்கு முன்பே படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் தான் மூன்று படங்களில் கமிட் ஆகியிருந்ததால் கைவசம் அவர்கள் கேட்ட தேதி இல்லை என்றும் கூறினார்.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது. இதனை அடுத்து மீண்டும் தனுஷ் படக்குழுவினர் மீண்டும் என்னிடம் அணுகிய போது தன்னிடம் தேதி இருந்ததாகவும், அதன்பின்னரே ஒப்பந்தமானேன் என்றும் கூறியுள்ளார். எனவே தனுஷ் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கொரோனா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் தனுஷுடன் தானும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

More News

இரு பிரிவுகளாக பிரிந்த 'அண்ணாத்த' டீம்: ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.

பிரபாஸின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தன்ஹாஜி' என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி

சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் இன்று அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'மாநாடு'

மணிக்கூண்டு டாஸ்க்: வெற்றி பெற்ற அணி எது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்ற நிலையில் போட்டியாளர்களில் ஒரு சிலர் தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சீரியசாக விளையாடினார்கள்

நயன்தாரா பிறந்த நாள் புகைப்படங்களுக்கு விக்னேஷ் சிவனின் ஸ்வீட் கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு விக்னேஷ் சிவன் உள்பட மொத்த திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது