சுற்றுச்சூழல் தினத்தில் 'தங்கலான்' நாயகி செய்த வேறலெவல் சேட்டை… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன் சுற்றுச்சூழல் தினத்தை இப்படியும் கொண்டாடலாம் என்று ரசிகர்களுக்கு காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றார். தொடர்ந்து நடிகர் தனுஷுடன் இணைந்து ‘மாறன்’ திரைப்படத்திலும் அதேபோல பாலிவுட்டில் ‘யுத்ரா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘கிரிஸ்டி’ என்ற மலையாளத் திரைப்படமும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். கோலார் தங்கவயல் கதையைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் திரைப்படம் தனக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்றும் இந்தத் திரைப்படத்திற்காக ‘சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ரோலிங், கிக்ஸ், ஜம்ப்ஸ் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் ஜுன் 6 சுற்றுலா தினத்தை அனுசரிக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அருவி ஒன்றிற்கு அருகில் நிற்கும் இவர் அடுத்து சிறு குழந்தையைப் போன்று தத்தித்தாவி விளையாடியபடியே வனப்பகுதிக்குள் செல்கிறார். இந்த வீடியோதான் தற்போது ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது.

அதில் சிறுகுழந்தைப் போன்று விளையாடி கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ‘டக் வாக் தான் இப்போ டிரெண்ட்’ என்றும் ‘க்யூட்‘ என்றும் கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.


 

More News

திரையுலக பிரபலத்தின் காலில் விழுந்து ஆசிபெற்ற அண்ணாமலை.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலக பிரபலத்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பெண்ணின் நிர்வாணத்தை உடலுறவாகப் பார்க்க முடியுமா? கேரள நீதிமன்றம் அதிரடி!

பெண்ணின் நிர்வாணத்தை பாலியல் ரீதியாகப் பார்க்கக்கூடாது. மேலும் ஆபாசமாகவோ அல்லது அநாகரிகமாகவோ சித்தரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

மலேசியா இரட்டை கோபுரங்களுக்கு நடுவில் இளம் நடிகை… செம மாஸான புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகை

கடலை பார்த்தபடி காஃபி, புத்தகம்… துருக்கி சென்ற நடிகை சமந்தாவின் வைரல் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை சமந்தா பற்றிய தகவல்கள் எப்போதும் ரசிகர்களிடம் புது உற்சாகத்தை ஏற்படுத்தும்

'ஆதிபுருஷ்' வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கை காலி.. அனுமனுக்காகவா?

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம்