'கோட்' படத்தில் நடிக்க முடியாது என கூறிய பிரபல நடிகர்.. வெங்கட்பிரபுவின் ரியாக்சன்..!

  • IndiaGlitz, [Wednesday,April 03 2024]

’கோட்’ திரைப்படத்தில் நடிக்க முடியாது என பிரபல நடிகர் ஒருவர் கூறிய போது வெங்கட் பிரபுவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல மலையாள நடிகர் வினித் சீனிவாசனை வெங்கட் பிரபு அணுகியதாகவும், அப்போது தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலையில் இருப்பதாக வினித் சீனிவாசன் கூறியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தை தான் இயக்கிய நடித்துக் கொண்டிருந்ததால் ’கோட்’ படத்தின் வாய்ப்பை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார். ஒரு படத்தில் நான் நடிக்கிறேன் என்றால் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடிக்கலாம், ஆனால் நானே இயக்குனராக இருப்பதால் இன்னொரு படத்தின் கமிட்டாவது நன்றாக இருக்காது என்று நான் வெங்கட் பிரபுவுடன் கூறிய போது அவரும் அதை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று என்னிடம் கூறியதாகவும் வினித் சீனிவாசன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வினித் சீனிவாசன் இயக்கிய ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பீஸ்ட்' நாயகிக்கு திருமணம்.. மாப்பிள்ளை 'மஞ்சும்மெல் பாய்ஸ்' பிரபலமா?

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான 'பீஸ்ட்' படத்தில் நாயகிகளில் ஒருவரான நடித்த அபர்ணாதாஸ், மஞ்சும்மெல் பாய்ஸ் பிரபலத்தை திருமணம் செய்ய இருப்பதாகவும் இவர்களது திருமணம் ஏப்ரல்

ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவதை விட இதுதான் பச்சை துரோகம்: விஜய்சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

வெங்கட் பிரபு திடீரென வெளியிட்ட போஸ்டர்.. ரசிகர்கள் மட்டுமல்ல இன்ப அதிர்ச்சியில் 'கோட்' நடிகர்..!

இயக்குனர் வெங்கட் பிரபு இன்று திடீரென தனது சமூக வலைத்தளத்தில் 'கோட்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த நடிகரும் இன்ப அதிர்ச்சி

'கோட்' 'கங்குவா' ஓடிடி பிசினஸ் எத்தனை கோடிகள்? ஆச்சரியமான தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' மற்றும் சூர்யா நடித்து முடித்துள்ள 'கங்குவா' ஆகிய படங்களில் ஓடிடி பிசினஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருமணத்திற்கு முன் 3 உறுதிமொழிகள் கொடுத்த சித்தார்த்.. நெகிழ்ந்து போன அதிதிராவ்..!

சமீபத்தில் நடிகர் சித்தார்த்த மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்திற்கு முன் அதிதி ராவிடம் சித்தார்த் மூன்று உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாக