'கடாரம் கொண்டான்' படத்திற்கு மலேசியாவில் தடை! ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,July 22 2019]

கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படம் மலேசியாவில் ரிலீஸ் ஆகவில்லை. மலேசிய அரசு இந்த படத்திற்கு சென்சார் சான்று தரவில்லையாம். இந்த படத்தின் கதைப்படி மலேசியாவில் திருடனாக இருக்கும் விக்ரம், மலேசியா போலீசார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து செல்வது போல் இருக்கும். எனவே தங்கள் நாட்டு போலீஸை தவறாக இந்த படத்தில் சித்தரிப்பதாக கூறி மலேசிய சென்சார் போர்டு இந்த படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாம்.

இதனையடுத்து மலேசியாவில் உள்ள விக்ரம் ரசிகர்கள் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தை சிங்கப்பூர் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மலேசியாவில் இந்த படம் வெளியாகாததால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

More News

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா: சாண்டி செய்த கலாட்டா!

கட்டிப்பிடி வைத்தியம், முத்த வைத்தியம் மற்றும் அழுகைக்கு சொந்தக்காரரான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து

இந்திய விண்வெளித்துறையின் அடுத்த மைல்கல்லான சந்திராயன் 2 விண்கலம் இன்று சரியாக 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்: ரஜினிக்கு நன்றி கூறிய சூர்யா

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சீனாவில் ரிலீஸ் ஆகுமா அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை'?

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது

படங்களில் மட்டுமே புரட்சிகரமான கருத்துக்கள்: ஷங்கரை கடுமையாக சாடிய சீமான்

நடிகர் சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நேற்று இதுகுறித்து கருத்து கூறிய