நடுரோட்டில் கொள்ளை முயற்சி: கணவரை காப்பாற்றிய இளம்பெண்ணின் வீரம்!

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

பெங்களூரில் நடுரோட்டில் திடீரென கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவரை அவரது மனைவி வீரமுடன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் உள்ள ஒரு பாலத்தில் இளம் தம்பதியர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் அவர்களது காரை வழிமறித்தனர். அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்துக் கொண்டு காரில் இருந்தவர்களை நோக்கி வந்தார். காரில் இருந்த இளைஞரின் கழுத்தில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்ளிட்டவற்றை பறிக்க அந்த கொள்ளையன் முயற்சித்த போது அந்த இளைஞர் கொள்ளையரை தடுத்தார். இதனால் அவரது முகம் கழுத்து ஆகிய இடங்களில் கொள்ளையன் கத்தியால் குத்தினார்.

இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அவரது மனைவி திடீரென காரின் கியரை மாற்றி ஆக்சிலேட்டரை அழுத்தினார். கார் வேகமாக நகர ஆரம்பித்ததால் காரின் முன்னால் இருந்த பைக்கின் மீது மோதியதால் அந்த பைக்கில் இருந்த கொள்ளையன் ஒருவன் கீழே விழுந்தான். இதனை சிறிதும் எதிர்பாராத கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர். அதன் பின்னர் காயமடைந்த கணவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அவரது மனைவியே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை நடந்து கொண்டிருந்த இக்கட்டான நிலையில் கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்து, கணவரையும் காப்பாற்றிய இளம் பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

முதல் படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த எமிஜாக்சன்

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'மதராசபட்டணம்' என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் என்பது தெரிந்ததே.

காமக்கொடூரன் கையில் மாட்டிய 300 குழந்தைகள்!!! ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த அவலம்!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபேவின் குற்றப் பட்டியல்!!! ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள்!!!

போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 8 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபேவை பற்றித்தான் தற்போது இந்தியா முழுக்க பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: கொரோனாவில் இருந்து மீள்கிறதா தமிழகம்?

தமிழ்நாட்டில் இன்று 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்

'செம்பருத்தி' படப்பிடிப்பு: முதல் நாளிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்-ஷபானா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததே