close
Choose your channels

மணிமேகலையின் கணவர் ஹூசைனை தெரியும், தம்பியை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்..!

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த மணிமேகலையின் சகோதரர் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

‘குக் வித் கோமாளி’ சீசன் ஒன்றிலிருந்து கோமாளியாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் மணிமேகலை என்பதும் அவரது டைமிங் காமெடி நடுவர்களான வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர்கள் உள்பட அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியதாக அறிவித்ததால் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தை மணிமேகலை கூறவில்லை என்றாலும் அவர் தனது சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டப் போவதாகவும் அதற்கான பணிகளில் ஈடுபட இருப்பதால் அவர் வெளியேரியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிமேகலை, ஹூசைன் என்பவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மணிமேகலை தனது சகோதரரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஹூசேன் மற்றும் அவரது சகோதரர் குணா ஆகிய இருவரும் இருக்கும் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே மணிமேகலையின் சகோதரர் குணா தனது சகோதரி மற்றும் மாமாவுடன் இருக்கும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு, ‘“கவிதை போல் உள்ள குடும்பத்தில் நானும் ஒரு வார்த்தை ஆகலாமோ!!” என்று கேப்ஷனாக பதிவு செய்திருந்த நிலையில் தற்போது மணிமேகலை முதல் முறையாக தனது சகோதரரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment