close
Choose your channels

அருள்மொழியும் கரிகாலரும் ஒன்று சேரக்கூடாது: 'பொன்னியின் செல்வன்' டிரைலர்

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் அறிமுக உரையோடு ஆரம்பிக்கும் இந்த டிரைலரில் ஐந்து முக்கிய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம்ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா மற்றும் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அறிமுகம் செய்யப்படும்போதும், அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் காட்சிகள் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் தோட்டா தரணியின் பிரமாண்டமான கலை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆகும். லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு பெருமை மிகுந்த திரைப்படமாக இருக்கும் என்பது ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

மொத்தத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியான பிறகு படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதும், இரண்டு நிமிட ட்ரெய்லர் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி கல்கியின் வாசகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment