'பொன்னியின் செல்வன்' டீசர் சோழர்கள் தலைநகரில் நடைபெறுகிறதா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழாவை சோழர்களின் தலைநகரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்த மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது சோழர்கள் காலத்தில் தலைநகராக இருந்த தஞ்சையில் இந்த படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் ரிலீஸ்: என்ன பட்டம் கொடுத்துருக்காங்க தெரியுமா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த கன்னட படம் ஒன்றான 'அரபி' என்ற படத்தின் டீசர் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில தொழில்நுட்ப

'விக்ரம்' குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பிக்பாஸ் நடிகை: வீடியோ வைரல்

view-source:https://tamil.filmibeat.com/news/bigg-boss-julie-playing-with-vikram-movie-child-artist-video-trending-096355.html

'லைஃப் டைம் செட்டில்மெண்ட்' லோகேஷூக்கு கமல் கொடுத்த விலைமதிப்புள்ள பரிசு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தை இயக்கிய தனக்கு லைப்ஸ்டைல் செட்டில்மெண்ட் என்று லோகேஷ் கனகராஜ் கூறிய நிலையில் அவருக்கு விலை மதிப்புள்ள கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார். 

'விக்ரம்' வெற்றிக்கு நன்றியை கூட வித்தியாசமாக கூறிய கமல்: 5 வீடியோக்கள் வைரல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

லோகேஷை அடுத்து 'லைஃப்டைம் செட்டில்மெண்ட்' கூறிய 'விக்ரம்' நடிகர்!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது