close
Choose your channels

லோகேஷை அடுத்து 'லைஃப்டைம் செட்டில்மெண்ட்' கூறிய 'விக்ரம்' நடிகர்!

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ்க்கு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கடிதம் எழுதி இருந்தார் என்பதும் அந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், ’லைப்ஸ்டைல் செட்டில்மெண்ட்’ என்று கூறி இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் லோகேஷை அடுத்து ‘விக்ரம்’ படத்தில் நடித்த அர்ஜுன்தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் ’லைப்ஸ்டைல் செட்டில்மெண்ட்’ என்று ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஒரு கேரக்டர் இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜ் அழைத்தபோது எந்த கேள்வியும் கேட்காமல் சரி என்று கூறினேன். ஆனால் நான் நடித்த காட்சியில் ஒரு பக்கம் கமல் சார் மறுபக்கம் சூர்யா சார் இருந்ததால் என்னால் என்ன செய்ய முடியும் என்றே தெரியவில்லை. நாம் கொண்டாடி தீர்க்கின்ற இரண்டு நடிகர்கள் என் கண்முன் நின்றார்கள். அவர்களை பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்ததே என் வாழ்வில் மிகச் சிறந்த அனுபவமாக கருதுகிறேன். இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை.

எனக்கு பிடித்த மூன்று பேர்களான கமல் சார், சூர்யா சார் மற்றும் லோகேஷ் சார் ஆகியோருடன் ஒரே படத்தில் வேலை செய்துள்ளேன். கமல்ஹாசனை பார்ப்பதற்காக பல நாட்கள் நான் காத்திருந்த நிலையில் இன்று அவர் படத்தில் நடித்ததன் மூலம் எனது கனவு நனவாகி விட்டது. இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி.

மேலும் ‘விக்ரம்’ படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்களாகிய நீங்கள் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கூறுங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அப்போது என்னால் கூற முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்போது இப்போது உறுதியாக கூறுகிறேன். இந்த படத்தில் நடித்ததுதான் ’லைப் டைம் செட்டில்மெண்ட்’ என்று கூறியுள்ளார். அர்ஜூன் தாஸின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.