அப்பவே மணிரத்னம் பான் - இந்தியா இயக்குனர்: ஷங்கர் புகழாரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர், ‘மணிரத்னம் அவர்கள் அப்பவே பான் - இந்தியா இயக்குனர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஷங்கர், மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த விழாவில் பேசியதாவது:

தற்போது பல இயக்குனர்கள் பான் - இந்தியா படங்களை இயக்கி வருவதாக கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவின் முதல் பான் - இந்தியா இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் இயக்குனர் மணிரத்தினம் மட்டும்தான். ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் இந்தியாவின் அனைத்து மூலை முடுக்கிலும் ஹிட்டானதால் என்பதும் அந்த படங்கள் எல்லாம் பான் - இந்தியா படங்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

என்னுடைய பெரும்பாலான படங்களுக்கு இன்ஸ்பிரஷனாக இருப்பது மணிரத்னம் அவர்களின் படங்கள்தான் என்றும் குறிப்பாக பாடல் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததே ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ திரைப்படத்தை பார்த்த பிறகு தான் என்றும் அவர் கூறினார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நான் முயற்சி செய்தேன், மணிரத்னம் வெற்றி பெற்றுவிட்டார்; 'பொன்னியின் செல்வன்' குறித்து கமல்ஹாசன்!

 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை எடுக்க நான் முயற்சி செய்தேன் என்றும் ஆனால் மணிரத்னம் செய்து காட்டிவிட்டார் என்றும் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில்

ஜெயலலிதா என்னை பரிந்துரைத்தார் - ரஜினிகாந்த்

பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்ற வந்தியதேவன் கேரக்டருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை தான் தேர்வு செய்தார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று

அருள்மொழியும் கரிகாலரும் ஒன்று சேரக்கூடாது: 'பொன்னியின் செல்வன்' டிரைலர்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில்

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் திடீரென இணைந்த தனுஷ்: என்ன செய்திருக்கார் பாருங்க!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துவரும் 'விடுதலை' திரைப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் ராஜீவ் மேனன் இணைந்த நிலையில் தற்போது தனுஷ் இணைந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு

'நீ எப்ப வரப்போற மச்சான்': வெந்து தணிந்தது காடு வீடியோ பாடல் ரிலீஸ்!

 சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.