close
Choose your channels

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மணிரத்னம் பட ஹீரோ-ஹீரோயின்!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிவடைந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இரண்டு சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் தற்போது திரையுலகில் ஜொலித்து வருகிறார்கள் என்ற நிலையில் மூன்றாவது சீசன் மற்ற சீசன் களை போலவே ஹிட்டாகி உள்ளது. இந்த சீசனில் ரோஷினி, அந்தோனி தாசன், வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், ஸ்ருதிகா, கிரேஸ், அம்மு அபிராமி, தர்ஷன், மனோபாலா மற்றும் ராகுல் தாத்தா ஆகியோர் குக்குகளாகவும், ஷிவாங்கி, குரேஷி, மணிமேகலை, ஷீத்தல், பாலா, சுனிதா, அதிர்ச்சி அருண், பரத், புகழ் ஆகியோர் கோமாளிகளாகவும் உள்ளனர்.

இந்தநிலையில் இந்த வார 'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் மணிரத்னம் படத்தில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மணிரத்தினம் இயக்கிய சூப்பர் ஹிட் படமான ‘ஓகே கண்மணி’ நாயகன் துல்கர் சல்மான் மற்றும் ‘காற்று வெளியிடை’ நாயகி அதிதிராவ் ஹைத்தி ஆகிய இருவரும் வரும் வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இருக்கும் காட்சிகள் புரோமோ வீடியோவில் உள்ளன.

அதுமட்டுமின்றி மதுரை முத்துவும் வரும் வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது. மொத்தத்தில் இரண்டாவது சீசன் போலவே மூன்றாவது சீசனையும் குக் வித் கோமாளி குழுவினர் ஹிட்டாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.